

நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
1974-ல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தேன் சிந்துதே வானம் , துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட 8 படங்களை இயக்கியுள்ளார்
பொண்டாட்டி தேவை, தாயம்மா, சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாயகனான கார்த்தி, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரைக் கூப்பிடும் காட்சி மிகப் பிரபலம்.
இதையும் படிக்க: இந்துவாக மதம் மாறிய லிவிங்ஸ்டன்!
சில நாள்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா, “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.