தமிழ் சினிமாவில் 1990-களில் முக்கிய நாயகனாக இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இயக்குநராக ஆசைப்பட்டு பின் நடிகரான இவர் பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதுடன் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.
கதாநாயகனாக நடித்த, ’சுந்தர புருஷன்’, ‘சொல்லாமலே’, ‘என் புருசன் குழந்தை மாதிரி’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன. பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் தில்லி பாபு என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது, சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்பதால் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி படத்திலிருந்து நீரவ் ஷா விலகல்?
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய லிவிங்ஸ்டன் தான் இந்து மதத்துக்கு மதம் மாறிவிட்டதாகக் கூறினார். என்ன காரணம் எனக் கேட்டதற்கு, “கிறிஸ்துவராக இருந்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஒரு மாறுதலுக்காக இந்து மதத்திற்கு மாறிவிட்டேன். எனக்கு கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும். அதனால், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பில் இணைந்து விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.