மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விடாமுயற்சி படத்திலிருந்து நீரவ் ஷா விலகல்?

விடாமுயற்சி படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வரும் நீரவ் ஷா அப்படத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

நடிகர் அஜித்துடன் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா!

Updated On :14 டிசம்பர் 2023, 6:58 am

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த நீரவ் ஷா திடீரென படப்பிடிப்பிலிருந்து விலகிக்கொண்டதாகவும் அவருக்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் விருப்பமான ஒளிப்பதிவளாராக இருப்பவர் நீரவ் ஷா. கிரீடம், பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.