‘என் கலையும் கடமையும் நான் யாரென்று நிரூபிப்பது அல்ல’: மாரி செல்வராஜ்

தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டதற்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். 
அமைச்சர்களுடன் மாரி செல்வராஜ்
அமைச்சர்களுடன் மாரி செல்வராஜ்

தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டதற்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். 

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் இணைந்து மீட்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஈடுபட்டார்.

அமைச்சர்களுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அதிகாரிகளை திரைப்பட இயக்குநர் வேலை வாங்குகிறார் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், “என் கலையும் கடமையும்  நான் யார் என்று நிரூபிப்பது அல்ல. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com