குறுகிய காலத்தில் 600 எபிஸோடுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல்! எப்படி சாத்தியம்?

சிங்கப்பெண்ணே, சுந்தரி -2 போன்ற தொடர்களின் வருகைக்குப் பிறகு எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி சற்று குறைந்துள்ளது.
குறுகிய காலத்தில் 600 எபிஸோடுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல்! எப்படி சாத்தியம்?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர், வெற்றிகரமாக 600 நாள்களை நிறைவு செய்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாள்களும் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இதனால், வெகுவிரைவில் எதிர்நீச்சல் தொடர் 600 நாள்களைக் கடந்துள்ளது. 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரை தொடர்களில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது எதிர்நீச்சல் தொடர். 

எதிர்நீச்சல் தொடரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளுக்கு பொருந்தும் வகையில் மீம்ஸ்களாகவும் மாறின. இதனால், எதிர்நீச்சல் தொடருக்கு இளம் தலைமுறை பார்வையாளர்களும் அதிகம். 

திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்களின் மூலம் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் காட்சிகள் எதிர்நீச்சல்
தொடரில் அதிகம் இடம்பெறுகின்றன. புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்கள் துயரப்படுவதையோ அல்லது புகுந்த வீட்டை தியாகம்
செய்து மேம்படுத்துவதையோதான் இதுவரையான தொலைக்காட்சித் தொடர்களில் காண முடிந்தது. 

இதனால் எதிர்நீச்சல் தொடர் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. 

எதிர்நீச்சல் தொடர் முன்பு டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தது. ஆனால், ஒளிபரப்பு நேர மாற்றத்துக்கு பிறகும் சிங்கப்பெண்ணே, சுந்தரி -2 போன்ற தொடர்களின் வருகைக்குப் பிறகும் எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி சற்று குறைந்துள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை, நீலகண்டன், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்தத் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். இவர், கோலங்கள், சித்திரம் பேசுதடி, வல்லமை தாராயோ போன்ற தொடர்களை இயக்கியவர். 

குறுகிய காலத்தில்...

2022 பிப்ரவரி முதல் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் பொதுவாக வார இறுதி நாள்கள் வரை மட்டுமே ஒளிபரப்பாகும் (திங்கள் - சனி). சமீப காலமாக மட்டுமே வாரத்தின் அனைத்து நாள்களிலும் (ஞாயிறு உள்பட) தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகத் தொடங்கிய முதல் தொடராக எதிர்நீச்சல் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாவதால், மற்ற தொடர்களைக் காட்டிலும் எதிர்நீச்சல் தொடர் விரைவில் 600 எபிஸோடுகளைத் தாண்டியுள்ளது.

எதிர்நீச்சல் போன்று தற்போது ஜீ தமிழின் கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தாலே இனிக்கும், மீனாட்சி பொண்ணுங்க ஆகிய நான்கு தொடர்களும்  ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com