50 நாள்களில் 16 கிலோ எடை குறைத்த சீரியல் நடிகை!

சமூக  வலைதளங்களில் ஆல்யாவின் பழைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 
50 நாள்களில் 16 கிலோ எடை குறைத்த சீரியல் நடிகை!
Published on
Updated on
2 min read

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தனது உடல் எடையைக் குறைத்ததன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக  வலைதளங்களில் ஆல்யாவின் பழைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இனியா தொடரில் நடித்து வருபவர் நடிகை ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர். 

அந்தத் தொடரில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து கடந்த 2019-ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 

அதனைத் தொடர்ந்து சிறு இடைவேளைக்குப் பிறகு  தற்போது மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் ஆல்யா மானசா நடித்து வருகிறார். 

சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஆல்யா, தனது குடும்பத்துடன் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவிடுவது வழக்கம். 

அந்தவகையில், சமீபத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்களில் அவர் முன்பை விட எடை குறைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை அவ்வபோது அவர் வெளியிடும் படங்களிலும் ஆல்யா குறிப்பிட்டுள்ளார். 

சமீப காலமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதன் பலனாக கடந்த 50 நாள்களில் மட்டும் 16 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் ஆல்யா குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் பழைய புகைப்படங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

திருமணத்துக்குப் பிறகு பெண்கள் நடிப்புத் துறையில் நீடிக்க முடியாது என்ற பொதுக்கருத்தை பொய்யாக்கும் வகையில், ஆல்யா தனது உடல் எடையைக் குறைத்து சின்னத்திரையில் முன்னணி நாயகியாகவே வலம் வருவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். ஆல்யாவின் இந்த செயல் பலரை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com