அமீர் இயக்கும் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 
அமீர் இயக்கும் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அமீர். ஆனால் இவர் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார். கடைசிய இவரது இயக்கதில் ஆதி பகவன் என்கிற படம் வெளியானது.

இந்த நிலையில் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அமீர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அமீர் இயக்கும் இந்த படத்திற்கு இறைவன் மிகப் பெரியவன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து கதை எழுதியுள்ளனர்.

இதில் விஜய் டிவி புகழ் அஷார், கரு பழனியப்பன், மைதீன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அமீரின் பிரதான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.  ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இறைவன் மிகப் பெரியவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் படம் 2024 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.மேலும் இந்த போஸ்டர் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com