ஓடிடியில் வெளியானது ‘செவ்வாய்கிழமை’ படம்!

நடிகை பாயல் ராஜ்புத் நடிப்பில் வெளியான செவ்வாய்கிழமை படம் ஓடிடியில் வெளியானது.  
ஓடிடியில் வெளியானது ‘செவ்வாய்கிழமை’ படம்!
Published on
Updated on
1 min read

2018இல் வெளியான ஆர்எக்ஸ்100 படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதன் ஒரிஜினலான கதை சொல்லும்பாணி வழக்கமான தெலுங்கு சினிமாவில் இருந்து மாறியிருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர்தான் அஜய் பூபதி. இவரது இரண்டாவது படம் கரோனா காலகட்டத்தில் தாமதமாகி வெளியாகியது. 

தற்போது அஜய் பூபதியின் 3வது படம் மங்களவாரம். செவ்வாய்கிழமை என்ற பெயரில் தமிழில் வெளியானது. இந்தப் போஸ்டரில் கதாநாயகி நடிகை பாயல் ராஜ்புத் நடிப்பில் வெளியான செவ்வாய்கிழமை படம் ஓடிடியில் வெளியானது. ஆடையின்றி முதுகை காண்பித்தபடி இருக்கும் போஸ்டர் வெளியாகி சர்சையானது. இந்தப் படத்தினை ஸ்வாதி, சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்தார்கள்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியப் படமாக வெளியாகியது. 

இந்தப் படம் 90களில் கிராமத்தில் நடைபெறும் த்ரில்லர் கதையாக அமைந்திருந்தது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வகைமையில் இந்தப் படம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரமான தொழில் நுட்பங்களுடன் படமாக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜனீஷ் ஏக்நாத் இசையமைத்தார். 

மங்களவாரம் தமிழில் செவ்வாய்கிழமை என்ற பெயரில் வெளியானது.  ஓடிடி குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. நல்ல வரவேற்பினை பெற்ற இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வாதி ரெட்டி, “என்னுடைய உள்ளுணர்வு சொல்லியதால் இந்தப் படத்தினை தேர்வு செய்தேன். இந்தப் படத்தின் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென நினைத்தேன். சமூக விழிப்புணர்வுள்ள படங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி.  அறிமுகமாகும் முதல் படமே இப்படியாக அமைவது எனது வெற்றியாக பார்க்கிறேன். அஜய் ஒருவர் மாதிரி இயக்குநர் கிடைப்பது எனக்கு அதிர்ஷ்டம்.” எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com