கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநருக்கு பரிசளித்த சதீஷ்!

கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநருக்கு பரிசளித்த சதீஷ்!

கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநர் செல்வின் ராஜ் சேவியருக்கு நடிகர் சதீஷ் விலை உயர்ந்தப் பொருள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
Published on

கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநர் செல்வின் ராஜ் சேவியருக்கு நடிகர் சதீஷ் விலை உயர்ந்தப் பொருள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கிய  திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'.

இப்படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கான்ஜூரிங் கண்ணப்பன் படம்  டிசம்பர் 8-ல் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமரிசனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநர் செல்வின் ராஜுக்கு  நடிகர் சதிஷ் அவரது பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

நடிகர் சதிஷ், செல்வின் ராஜுக்கு வாட்ச் அளிக்கும் விடியோவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com