திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக தலைமையிலான தமிழக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது.
தமிழ் சினிமாத்துறையினரும் ‘கலைஞர் - 100’ என்கிற நிகழ்வை நடத்த உள்ளனர். ஜன.6 ஆம் தேதி சென்னை, கிண்டியில் இதற்காக மிகப்பெரிய விழா திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: இளம் பெண்ணுடன் விஷால்: ரசிகரை கண்டவுடன் ஓட்டம்(விடியோ)
இந்நிலையில், இந்நிகழ்வில் தமிழ் சினிமாத் துறைக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பைக் கூறும் வகையில், ஆவணப்படம் உருவாகி வருகிறது. இதனை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விஜய், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்கிற பெயரில் படமாக எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.