பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை டி.பி.கஜேந்திரன் காலமானார். இவர் விசு, மோகன் காந்திராமன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இவர், எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரைப் பதித்தவர் டி.பி.கஜேந்திரன்.
தற்போது அவரது இல்லத்தில் உடலை வைத்து அவரது உறவினர்கள் மேற்கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: 'மேகமே.. மேகமே..' வாணி ஜெயராம் குரலில் ஒலித்த பாடல்கள்
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நடிகர் செந்தில், கவுண்டமணி, ரமேஷ் கண்ணா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


