''ரோஜா'' தொடரில் நடித்து பிரபலமான பிரியங்கா நல்கார் ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர் 'ரோஜா'.
பிரியங்கா நல்கார் - சிபு சூர்யன் ஆகியோர் ரோஜா - அர்ஜுன் கதாபாத்திரங்களில் நடித்த இந்த தொடர் குடும்ப ரசிகர்களையும் தாண்டி இளைஞர்கள் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டது.
இந்த தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்தத் தொடருக்கு பதிலாக சன் தொலைக்காட்சியில் ஆல்யா மானசாவில் 'இனியா' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், 'ரோஜா' தொடரில் நடித்த பிரியங்கா நல்கார் ஜீ தமிழ் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். சீதா ராமன் எனப் பெரியரிடப்பட்டுள்ள அந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. சமீபத்தில் இந்த தொடரின் புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த தொடரின் புரோமோவை இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
'ரோஜா' தொடரில் முதலாளியை திருமணம் செய்துகொண்டு அர்ஜுன் சார் என்று அழைத்துக்கொண்டு கதாநாயகனுடனேயே இருக்கும் பிரியங்கா நல்கார், சீதா ராமன் தொடரின் புரோமோவிலும் திருமணமாகி செல்லும்போது புகுந்த வீட்டினரால் புறக்கணிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறார். இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.