பெற்றோர்களை மகிழ்ச்சியாக்க இதைச் செய்யுங்கள்: நயன்தாரா சொன்ன 'நச்' டிப்ஸ்!

பெற்றோர்களை மகிழ்ச்சியாக்க இதைச் செய்யுங்கள்: நயன்தாரா சொன்ன 'நச்' டிப்ஸ்!

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு நடிகை நயன்தாரா அறிவுரை வழங்கியுள்ளார்.  
Published on

2022-ல் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், ஓ 2, காட்ஃபாதர், கோல்ட், கனெக்ட் என ஐந்து படங்கள் வெளியாகின. 2019-ல் ஏழு படங்களும் 2020-ல் இரு படங்களும் 2021-ல் நான்கு படங்களும் வெளியாகின. தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் மற்றும் அட்லி இயக்கத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என இரு படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடிக்கவுள்ள இரு புதிய படங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவஹர் மற்றும் மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி படத்திலும் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்திலும் நயன்தாரா ஏற்கெனவே நடித்திருந்தார். இரு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுவாக படத்தின் புரமோஷனுக்கும் பொது வெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுமில்லை. ஆனால் சில நாள்களுக்கு முன்பு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இதில் ஊதா நிற புடவையணிந்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு நயன் தாரா கூறியதாவது: 

கல்லூரி வாழ்க்கை என்பது நண்பர்களுடன் ஜாலியாக இருப்பது மட்டுமல்ல கல்லூரியிலும் நேரத்தை செலவிடுவதும் முக்கியம். இப்போதே வருங்காலத்திற்கான முடிவுகளை எடுக்க துவங்குங்கள். வெற்றியடைந்த பின்பும் அமைதியாக இருக்கவும். முக்கியமாக மாணவர்கள் 10 நிமிடமாவது தங்கள் பெற்றோர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அது உங்களது பெற்றோரை மகிழ்ச்சியாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com