பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நடிகை த்ரிஷா அவசரமாக சென்னை திரும்பியது ஏன்? ‘லியோ’ படத்திலிருந்து விலகலா?

நடிகை த்ரிஷா மூன்றே நாளில் காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Published On :

14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இணையும் படத்திற்கு ‘லியோ’ எனப் பெயரிடப்பட்ட ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இந்தப் படம் விஜய்க்கு மட்டுமல்ல நடிகை த்ரிஷாவுக்கும் 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

Story image

படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ வைரலானது. 

Story image

இந்நிலையில் மூன்றே நாளில் நடிகை த்ரிஷா சென்னைக்கு திரும்பியுள்ளதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காஷ்மீர் குளிர் அதிகாமாக இருந்ததால் த்ரிஷாவுக்கு உடல்நிலை பாதித்ததாகவும் அதனால் சென்னைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சிலர் படப்பிடிப்பு முடிந்த பிறகே த்ரிஷா சென்னை திரும்பியுள்ளதாகவும் சிலர் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.