இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா எப்போது?

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 3:44 am

DIN

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும்,  இப்படத்தை அடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

உலகளவில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகமானது, பெரிய திரை, துல்லியமான காட்சிக் கடத்தல்கள், ஒலி அமைப்பு கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியான முதல் ஐமேக்ஸ் திரைப்படம் இதுவாகும்.

இந்நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் அருண்மொழிவர்மன் - வானதி இருவருக்குமான பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த பாடலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து எந்தவித அதிகார்வபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் இசை வெளியீட்டு விழாவை மார்ச் மாதம் நடத்த திட்டமிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிரைலரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.