தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜவானில் இணையும் பிரபல நடிகர்

ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 6:08 am

DIN

ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக படமாக்கப்பட்டு வருகிறது. 

மேலும், ’ஜவான்’ கிளைமேக்ஸ் சண்டைக்காக நடிகர் ஷாருக்கான்  பெண்களுடன் சண்டையிடும் காட்சி எடுக்கப்பட்டதாகவும் அதில் 200-க்கும் அதிகமான பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னை வந்து கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.