

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தினை இயக்குகிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்தப்படத்தில் நடிப்பதாகவும் இதுதான் விஜய்யின் முதல் பான் இந்தியப் படமாக வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கியது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். நல்ல எனர்ஜி. தூல்.” என ட்வீட் செய்திருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை டெலிட் செய்தார். மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
சுனைனா நடிக்கும் 4 மொழிப் படத்தின் புதிய அப்டேட்!
ராஜமௌலி அல்லாத தெலுங்குப் படத்தின் வசூல் வேட்டை: ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாட்டம்!
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்: விக்னேஷ் சிவன்
‘விஜய் நன்றாக உடை அணிந்திருக்கலாம்’- அறிவுரை வழங்கிய இசையமைப்பாளர்
ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டாரா? பத்திரிகையாளரை சந்தித்த ரஜினி ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.