தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

துணிவு - வாரிசு டிரைலர்கள்: அடித்து ஆடப்போவது யார்? ஒரு கம்பேரிஷன்!

விஜய் - அஜித் வியாபார ரீதியாக தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்.  எனினும் பந்தயத்தில் எந்த நடிகர் முன்னணியில் உள்ளார்? யார் பின்தங்கியிருக்கிறார்? வெல்லப்போவது யார்?

News image
Updated On :4 ஜனவரி 2023, 4:18 pm

பொங்கல் பண்டிகைக்கான களத்தில் இறங்கியிருக்கின்றன தமிழின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் மோதவிருக்கின்றன. இவ்விருவர்களின் திரைப்படங்களும் நேரடியாக மோதுவது இது முதல்முறை அல்ல. கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை. 
 
திரைப்படங்களின் வெளியீட்டிற்கு முன்பாகவே பாடல் வெளியீடு போஸ்டர் வெளியீடு, டிரைலர், டீசர் வெளியீடு என முழு வேகத்தில் விளம்பரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

இரு நடிகர்களின் திரைப்படங்களுமே வியாபாரரீதியாக தங்களது இருப்பை இப்போதே நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.  எனினும் இந்த பந்தயத்தில் எந்த நடிகர் முன்னணியில் உள்ளார்? யார் பின்தங்கியிருக்கிறார்? யார் வெல்லப் போவது?

Story image

பண்டிகை காலத்தை முன்வைத்து வெளியாகும் திரைப்படங்களின் முக்கிய இலக்கு குடும்பங்கள். அதற்கேற்றார்போல தயாராகியுள்ளது நடிகர் விஜய்யின் வாரிசு. தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் தனது குடும்பத்தின் தொழில் போட்டியாளரான நடிகர் பிரகாஷ் ராஜை எப்படி வென்றார் என்பதே வாரிசு திரைப்படத்தின் கதை. தெலுங்கு திரையுலகின் வழக்கமான அதே வகையிலான கதையம்சம் கொண்ட இந்தப் படம் முழுக்க முழுக்க நடிகர் விஜய்யை நம்பி மட்டுமே களமிறங்குகிறது.

பீஸ்ட் தோல்விக்குப் பிறகு குடும்பங்களிடம் சரணடையும் நடிகர் விஜய்க்கு எந்தவகையிலும் இது புதுவித கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கப் போவதில்லை என்பதே அதன் டிரைலர் சொல்லும் செய்தி. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகளும், வசனங்களும் ஒருநாள் கொண்டாட்டத்துக்கானதாக மட்டுமே இருக்கப் போவதாகத் தெரிகிறது. படத்தில் ஆங்காங்கே பஞ்ச் வசனங்கள், அம்மா செண்டிமெண்ட், 50 பேரை அடிக்கும் அதிரடிக் காட்சிகள் என டிரைலரில் விரிகிறது வாரிசு திரைப்படம். 

Story image

நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் டிரைலர் என்ன எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது? மங்காத்தா திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது துணிவு. வலிமை அப்டேட் எங்கே என ரசிகர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வரை புகார் தெரிவிக்க இப்படியெல்லாம் பண்ணாதீங்க என சங்கடப்பட்டுக் கொண்ட நடிகர் அஜித்குமார் இந்தப் படத்திலும் அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

படம் அப்டேட் வரும்போது வரட்டும் என இருந்த அவர் ஆங்காங்கே மோட்டார் பயணத்தில் தலைகாட்டி இதுதான் அப்டேட் வைத்துக் கொள்ளுங்கள் என ரசிகர்களின் வாயடைத்தார். நடிகரின் லேட்டஸ்ட் கிளிக் எனப் பெயரில் வந்த இந்தப் படங்களிலேயே திருப்தியடைந்து கொண்ட ரசிகர்களுக்கு தற்போது துணிவு டிரைலர் என்ன நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது? 

முன்னர் தெரிவித்ததைப் போல எதிர்மறை கதாபாத்திரத்திற்கு தேவையான வசனங்களே படத்தின் டிரைலரை ஆக்கிரமித்திருந்தது. வங்கிக் கொள்ளை கதை கரோனா காலத்தில் மணி ஹெயிஸ்ட் எனும் வெப் தொடராக பழகிய பார்வையாளர்களுக்கு அதே எண்ணத்தையே துணிவும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

Story image

வலிமை திரைப்படத்தில் அம்மா செண்டிமெண்டில் ரசிகர்களை நோகடித்த அஜித்குமார் அதிலிருந்து மாறி தற்போது வங்கிக் கொள்ளை கதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அதிரடிக் காட்சிகளை நம்பியிருக்கும் இந்தப் படத்திற்கு ஆறுதல் அதுமட்டும்தானா இல்லை வேறு ஏதாவது கதைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஜனவரி 11ஆம் தேதிதான் தெரிவிக்கும். 

அடுத்தடுத்த நாள்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்படியிருந்தாலும் ரசிகர்களின் திரையரங்கிற்கான கொண்டாட்டமாக இவ்விரு படங்களும் இருக்கப் போவது உறுதி. 

Story image

வணிக வளாகத்தை கைப்பற்றிய கொள்ளையர்கள் கதையிலிருந்து அம்மா செண்டிமெண்டிக்கு விஜய் மாறியிருக்க அம்மா செண்டிமெண்டிலிருந்து வங்கிக் கொள்ளை கதைக்கு நடிகர் அஜித் மாறியிருக்கிறார். ஆக மொத்தம் அவரது மேல் சட்டையை இவரும், இவரது மேல் சட்டையை அவரும் பரிமாறிக் கொண்டு ரசிகர்களின் பாக்கெட்டுகளை குறிவைக்கும் வேட்டையாக இருக்கப் போகிறது இந்தப் பொங்கல் பண்டிகை. ரசிகர்களே உஷார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.