பிக்பாஸ் முதல் இறுதிப் போட்டியாளர் இவர்தான்! விருதை தூக்கி வீசிய அஷீம்..

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் நிறைவடைந்தது.
பிக்பாஸ் முதல் இறுதிப் போட்டியாளர் இவர்தான்! விருதை தூக்கி வீசிய அஷீம்..

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் நிறைவடைந்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

இந்நிலையில், இந்த வாரம் ‘டிக்கெட் டூ ஃபைனல்’ டாஸ்க் நடைபெற்றது. அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணன் இந்த போட்டியில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், அடுத்த இரண்டு வாரம் நாமினேஷனை கடந்து நேரடியாக இறுதி வாரத்திற்கு முதல் போட்டியாளராக அமுதவாணன் சென்றுள்ளார்.

தொடர்ந்து, பிக் பாஸ் விருது வழங்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், ‘ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரியில்லை’ என்ற விருதை அஷீமுக்கு ஏடிகே கொடுத்தார்.

மேடை ஏறி விருதை வாங்கிய அஷீம், இது எனக்கு தேவையில்லை எனக் கூறிவிட்டு விருதை தூக்கி வீசிய சம்பவம் சக போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல் போட்டியாளராக அமுதவாணன் இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில், ஒருவர் இந்த வாரமும், இருவர் அடுத்த வாரமும் போட்டியைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். மீதமுள்ள நான்கு பேர் இறுதி வாரத்திற்கு முன்னேறுவார்கள்.

அடுத்தடுத்த வாரங்களை கடந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் நான்கு போட்டியாளர்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com