'பிக்பாஸ்' சலிப்பு...? 'குக் வித் கோமாளி'க்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

'பிக்பாஸ்' சலிப்பு...? 'குக் வித் கோமாளி'க்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி நான்காவது சீசனுக்கான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 
Published on

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி நான்காவது சீசனுக்கான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

'பிக்பாஸ் சீசன் 6' நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் இந்த சீசனுக்கான இறுதிப்போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு அடுத்த வாரத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிறைவுபெறவுள்ளது. 

பிக்பாஸின் ஏனைய சீசன் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது, இந்த சீசனுக்கு மக்கள் மத்தியில் குறைந்த அளவே ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி. முத்து தானாக போட்டியிலிருந்து வெளியேறியது. மேலும், தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களிடம் சண்டை மட்டுமே நீடித்து வருவது போன்றவையே இதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 4-க்கான முன்னோட்ட (புரோமோ) விடியோ வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா போன்றவர்கள் வெள்ளித் திரையில் படங்களில் நடித்து வருகின்றனர். 

அந்தவகையில், தற்போது  குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து கோமாளியாக பங்குபெறுகிறார். இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குரேஷி, பரத், போன்றவர்கள் இல்லை என்ற குறை ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும், ஜி.பி. முத்து போன்ற புதுவரவுகளால் நிகழ்ச்சியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குக் வித் கோமாளி 4 முன்னோட்ட விடியோவில் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com