
நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இசை நடிப்பு என இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். அவர் கடைசியாக நடித்த பேச்சுலர் திரைப்படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் பிவி சங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜிவி பிரகாஷ்குமார், இவானா உள்ளிட்டோர் நடித்துள்ள கள்வன் திரைப்படத்தின் டீசரை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டார்.
இதையும் படிக்க | ‘ஓடிடியில் படம் பார்ப்பது ரெளடித்தனம்’: இயக்குநர் மிஷ்கின்
காடு, யானை ஆகியவற்றை உள்ளிடக்கிய பின்னணி கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் டில்லிபாபு தயாரிக்கிறார்.
இந்த ஆண்டின் கோடையில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் ஏற்கெனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.