பிக்பாஸ் போட்டியாளருக்கு வாக்கு சேகரிக்கும் திருமாவளவன்!

பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதி வாரத்தில் 6 பேர் மட்டுமே தகுதிபெற்றனர்.
திருமாவளவன்
திருமாவளவன்

பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதி வாரத்தில் 6 பேர் மட்டுமே தகுதிபெற்றனர். இன்னும் 4 நாள்களில் இந்த சீசன் முடிவடையவுள்ளது.

இறுதி வாரத்தில் உள்ள 6 போட்டியாளர்களில் ஒருவர் கொடுக்கப்பட்டுள்ள பணத்துடன் வெளியேற விருப்பப்பட்டால் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கதிரவன் குறைந்தபட்ச தொகையான ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக அறிவித்துவிட்டார்.

கதிரவன் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு தற்போது அஷீம், விக்ரமன், சிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

இவர்களில் ஒருவர் தான் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 50 லட்சம் பரிசுத் தொகையையும், பிக்பாஸ் டிராபியையும் வெல்ல உள்ளார். குறிப்பாக அஷீம் மற்றும் விக்ரமன் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்த் நிலையில், தற்போது திடீர் திருப்பமாக விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டரில் ஓட்டு கேட்க தொடங்கி உள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம் வெல்லும்" என பதிவிட்டுள்ளார்.

இதிலிருந்து அவரது கட்சியினர் வாக்குகள் விக்ரமனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஷீமின் உறவினர் ஆளூர் ஷானவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com