இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விஜய்யுடன் சண்டைக்காட்சியில் நடித்தேன்: பிரபல இயக்குநர்

விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு குறித்து பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஜனவரி 2023, 6:56 am

DIN

விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு குறித்து பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படம் முழுக்க முழுக்க தன்னுடைய படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படம் பாதி இயக்குநர் படமாகவும் பாதி விஜய் படமாகவும் உருவானது. 

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பிரபல நடிகர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தில் தான் ஒரு சண்டைக்காட்சியில் நடித்ததாகவும் அதில் விஜய்யை அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

விஜய் 67 படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் மிஷ்கின் வெளியிட்ட தகவல் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.