கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவருடைய அடுத்ததடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் மணிரத்னம் - கமல்ஹாசன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: ஜெயிலரில் இணைந்த பாகுபலி நாயகி!
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
அதன்படி, கமல்ஹாசனின் 234- வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் கமலுடன் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், மம்மூட்டி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


