கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் - நடிகை அதியா திருமணம்: கணவன்-மனைவியாக முதல் புகைப்படம்

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகை அதியா ஷெட்டி திருமணம்  திங்கள்கிழமை மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. 
கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் - நடிகை அதியா
கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் - நடிகை அதியா
Published on
Updated on
1 min read

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகை அதியா ஷெட்டி திருமணம்  திங்கள்கிழமை மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. 

மும்பையிலிருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் கண்டாலா பகுதியில் உள்ள அதியாவின் தந்தை சுனீல் ஷெட்டிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அதியா - கே.எல். ராகுல் திருமண வைபவம் இனிதே நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் தம்பதி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அதியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்துடன், உங்களின் ஒளியில், நான் எப்படி காதலிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறேன்.

இன்று, எங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் முன்னிலையில்,  எங்கள் வீட்டில் திருமணம் செய்துகொண்டோம், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் அளித்தது. நன்றியுணர்வும் அன்பும் நிறைந்த இதயத்துடன், இந்த ஒற்றுமைப் பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களைத் கோருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி. 2015 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் ஞாயிறன்று மெஹந்தி விழா நடைபெற்றது. திங்கள் அன்று, மலை வாசஸ்தலமான கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஆகிய இருவருக்கும் காதல் திருமணம் இனிதே நடைபெற்றது. 

இரு தரப்பிலிருந்து தலா 100 பேர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். மேலும் திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் யாரும் புகைப்படம், விடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

2023 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காக மும்பையில் பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நட்சத்திர தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com