பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் நடிப்பில் மார்ச் 21இல் தெலுங்கில் வெளியான விரூபாக்ஷா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்க சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மாமன்னன் தனபால் என்றால்... ஃபஹத் ஃபாசில் யார்?
பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமாரன் திரைக்கதை எழுதிய இந்தப் படத்தினை கார்த்திக் வர்மா இயக்கியுள்ளார். சுகுமார், பிவிஎஸ்என் பிரசாத் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுனில், பிரமாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படம் தமிழிலும் வெளியானது. ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியினால் படக்குழு இயக்குநர் கார்திக் வர்மாவுக்கு காரை பரிசாக அளித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் வர்மா, “விரூபாக்ஷா வாழ்நாள் நினைவுகள் தருபவையாகும். எனது நன்றியை எனது குரு சுகுமார் சாருக்கும் அற்புதமான பரிசளித்த எனது பட ஹீரோ சாய் தரம் தேஜிக்கும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


