பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தில் நடித்து முடித்திருந்தார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் நாயகிகளான கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காவாலா!
வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமே ஜெயம் ரவியின் பெரிய படமென்பது குறிப்பிடத்தக்கது.