காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காவாலா!

ஜெயிலர் படத்தின் முதல் பாடலான தமன்னாவின் காவாலா பாடல் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Published On :

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இப்படம் ஆகஸ்ட்  10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ நாளை(ஜூலை - 6) வெளியாகிறது.

காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தமன்னாவின் நடனத்தில் உருவாகும் இப்பாடல் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்று இந்தியா முழுவதும் ஒலித்த ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்துவதாகவும் நிச்சயம் ‘காவாலா’ ஏமாற்றாது என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்!

— Sun Pictures (@sunpictures) July 3, 2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.