இவர்கள் இருவரும் இல்லையென்றால் எதிர்நீச்சல் தொடரே வீண்!

சன் தொலைக்காட்சியில் விருது வழங்கும் விழாவிலும் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை வென்று எதிர்நீச்சல் தொடர் சாதனை படைத்துள்ளது. 
இவர்கள் இருவரும் இல்லையென்றால் எதிர்நீச்சல் தொடரே வீண்!
Published on
Updated on
2 min read

எதிர்நீச்சல் தொடரில் பல கதாபாத்திரங்கள் மக்கள் மனங்களை வென்றுள்ளன. எனினும் அதில் இரு கதாபாத்திரங்கள் இல்லை என்றால், எதிர்நீச்சல் தொடரின் முக்கியத்துவமே குறைந்துவிடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் அதிக அளவிலான ரசிகளைக் கவர்ந்துள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற சன் தொலைக்காட்சியில் விருது வழங்கும் விழாவிலும் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை வென்று எதிர்நீச்சல் தொடர் சாதனை படைத்துள்ளது. 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரைப்போன்று அதன் முன்னோட்ட (புரோமோ) விடியோக்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் முன்னோட்ட விடியோக்களில் ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

அந்தவகையில், எதிர்நீச்சல் தொடரில் வரும் குணசேகரன், கரிகாலன் ஆகிய இரு கதாபாத்திரங்களும் இல்லை என்றால் எதிர்நீச்சல் தொடரின் சுவாரசியமே குறைந்துவிடும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். 

குணசேகரன் பாத்திரத்தில் ஜி.மாரிமுத்துவும், கரிகாலன் பாத்திரத்தில் விமல் குமாரும் நடித்து வருகின்றனர். ஆதிரை - கரிகாலன் கட்டாய திருமண காட்சிகள் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட காட்சியாக அமைந்தது. 

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார்.  எதிர்நீச்சல் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com