கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்!

16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார்.

News image

எஸ்.ஏ.ராஜ்கண்ணு

Updated On :12 ஜூலை 2023, 6:37 pm

‘16 வயதினிலே’ திரைப்படத் தயாரிப்பாளா் எஸ்.ஏ.ராஜ்கண்ணு (77) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘கன்னிப் பருவத்திலே...’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவா் எஸ்.ஏ. ராஜ்கண்ணு. அவரது படங்களில் நடித்த ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, கவுண்டமணி, பாக்யராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோா் பிரபலமடைந்தனா்.

இயக்குநா் பாரதிராஜாவை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவா் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய மூவரும் நடித்து தமிழ்த் திரையுலகையே புரட்டிப்போட்ட படங்களில் ஒன்று ‘16 வயதினிலே’.

அம்மன் கிரியேஷன்ஸ் சாா்பில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு கடைசியாக ‘மகாநதி’ படத்தை தயாரித்தாா். அவரின் மறைவுக்கு நடிகா் கமல்ஹாசன், இயக்குநா் பாரதிராஜா, நடிகை ராதிகா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு இரு மகள்கள் உள்ளனா். அவரது உடல் தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "16 வயதினிலே திரைப்படத்தின் வாயிலாக  என்னை இயக்குநராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என்  முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்." எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, என்னுடைய திரையுலக பயணத்தில் பெரும்பங்கு வகித்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்  சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.