ஹாலிவுட்டில் வேலை நிறுத்தம்: திரை எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகள்!

ஹாலிவுட்டில் வேலை நிறுத்தம்: திரை எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகள்!

ஹாலிவுட்டில் திரை எழுத்தாளர்களுக்காக நடிகர்கள், நடிகைகள் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
Published on

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் சந்தை இருக்கிறது. தமிழில் டப்பிங் செய்து வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு அதிகமான ரசிகர்களும் உள்ளார்கள். ஹாலிவுட்டில் திரைக்கதை எழுதுவதற்கு என்று தனியாக ஸ்க்ரீன் ரைட்டர்ஸ் எனும் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சம்பள உயர்வு காரணமாக டபிள்யூஜிஏ (ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா) அமைப்பினர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளார்கள். 

பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாக உள்ள ஓப்பனெய்மர் படத்தின் சிறப்பு காட்சிகளின்போது அதில் நடித்த நடிகர் நடிகைகள் வெளியேறி திரை எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்தனர்.  

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல படங்கள் பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்து வெளிவரவிருக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் பாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

எஸ்ஏஜி (ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட்) எனும் அமைப்பினரும் சரியான ஊதியமும் சரியான வேலை சூழ்நிலைகளையும் உருவாக்கி தர வேண்டுமெனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல ஹாலிவுட் நடிகர்கள் நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

60 வருடத்தில் இப்போதுதான் முதன்முறையாக எழுத்தாளர்களும் நடிகர்களும் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com