முடிகிறது சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்!

இந்தத் தொடரின் இறுதி எபிஸோட் இன்று (சனிக்கிழமை) ஒளிபரப்பாகவுள்ளது. 
முடிகிறது சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்!
Published on
Updated on
1 min read


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நண்பகல் நேரத் தொடர் இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்தத் தொடரின் இறுதி எபிஸோட் இன்று (சனிக்கிழமை) ஒளிபரப்பாகவுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பல்வேறு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் ஒளிபரப்பாகு தொடர்கள் இல்லத்தரசிகளை பெருமளவு கவர்ந்துள்ளது.

அந்தவகையில் திருமகள் தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஹரிக்கு சாது, சுரேந்தர் சண்முகம் மற்றும் சமீதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ரேகா சுரேஷ், பவானி சந்திரசேகர், பிரகாஷ் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

திருமகள் தொடர், கடந்த 2020 அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடரின் இதுவரை 783 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது. 

செல்வந்தர் வீட்டு மகன், அப்பாவுடன் உணவகம் நடத்திவரும் ஏழைப் பெண் மீது காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டு சந்திக்கும் சவால்களும் இன்னல்களுமே திருமகள் தொடரின் கதை. ஜெகன் மோகன் திருமகள் தொடரை இயக்குகிறார். 

இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் இன்றுடன்  முடிவடையவுள்ளது. நண்பகல் நேரத்தில்  ஒளிபரப்பாகும் தொடரின் முடிவு பல திருப்பங்களுடன் பலரை கவனிக்கவைத்துள்ளது. இதனால் சின்னத்திரையை சேர்ந்த பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com