பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சந்திரமுகி - 2 டப்பிங் பணிகளை முடித்த வடிவேலு!

சந்திரமுகி 2 படத்தின் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 5:28 am

DIN

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.19) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.அதற்கான இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நிலையில், அதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் நடிகர் வடிவேலு டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.