நான் எதிர்பார்த்த ஆள் இவர்தான்: காதலை உறுதிப்படுத்திய தமன்னா! 

நான் எதிர்பார்த்த ஆள் இவர்தான்: காதலை உறுதிப்படுத்திய தமன்னா! 

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 
Published on

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். 

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் நடிகை தமன்னா அதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நேர்காணலில் கூறியதாவது: 

உடன் நடிப்பதால் ஒருவர் மீது நமக்கு ஈர்ப்பு வராது. நான் எத்தனையோ பேரிடம் நடித்துள்ளேன். ஒருவரை நமக்கு பிடிப்பதும் அவர்களுக்கு எதையாவது செய்வதும் நமது தனிப்பட்ட விஷயம். அந்தராங்கமானது. வாழ்வதற்காக ஒருவர் செய்யும் விஷயத்திற்காக எனக்கு இது நடக்கவில்லை என்பதை கூற விரும்புகிறேன். 

லஸ்ட் ஸ்டோரிஸ்2வில்தான் நாங்கள் பழகினோம். விஜய் வர்மாதான் நான் எதிர்பார்த்த ஆள். அவரிடம் என்னால் மிகவும் இயல்பாக பழக முடிந்தது. அவருடன் இருக்கும் பாதுகாவலர்களை எல்லாம் விட்டு என்னை சந்தித்தார். பின்னர் எனக்கும் எனது பாதுகாவலர்களை எளிதாக விலக்க முடிந்தது. அதிகம் சாதிக்கும் பெண்கள், எல்லாவற்றுக்கும் அதிகம் மெனக்கெட வேண்டும். இந்தியாவில்தான் கணவர் ஒருவருக்காக பெண்கள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியிருக்கும். நானே உருவாக்கிய உலகத்தில் எனக்காக இருப்பவர்தான் அவர். நான் அதிகம் அக்கறைப்படும் நபராக அவர்தான் இருக்கிறார். ஆமாம், அவர்தான் என்னுடைய மகிழ்ச்சிக்கான இடமாக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com