புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாளவிகா மோகனனுக்கு 5 மணி நேர மேக்கப்.. இந்தப் படத்திற்கா?

தனக்கு தினமும் 5 மணி நேரம் மேக்கப் போடப்படுவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2023, 12:12 pm

DIN

தனக்கு தினமும் 5 மணி நேரம் மேக்கப் போடப்படுவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

மேலும்,  நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாளவிகா மோகனன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தங்கலானுக்காக தினமும் 4 - 5 மணி நேரம் மேக்கப் மற்றும் உடையலங்காரத்திற்கு தேவைப்படும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இவ்வளவு நேரம் அசையாமல் இருப்பதும் சவாலாக இருக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.