லால் சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவரா?
லால் சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் சில தினங்கள் நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தில் ரஜினி நடிக்கவுள்ள தோற்றம் மற்றும் பெயரை தயாரிப்பு நிறுவனம் போஸ்டராக வெளியிட்டது. அதில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லால் சலாம் ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிரோஷா 80களில் முன்னணி நட்சத்திராமாக இருந்தவர். இவர் கமல்ஹாசன், பிரபு, கார்த்திக் உடன் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: ரம்யா பாண்டியனின் இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
