
மீண்டும் சின்னத் திரை தொடரில் நடிகர் விஜய குமார் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர் என பல முகங்களை கொண்டவர் நடிகர் விஜயகுமார்.
இவர் சின்னத் திரையில் வம்சம், தங்கம், நந்தினி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். முன்னதாக ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் ஜமீன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம்: பிரதமர் மோடி
நடிகர் விஜயகுமாரை மீண்டும் சின்னத் திரையில் பார்ப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.