விரைவில் சூர்யவம்சம் 2: சரத்குமார் ட்வீட்!

நடிகர் சரத்குமார் சூர்யவம்சம் 2 பாகம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விரைவில் சூர்யவம்சம் 2: சரத்குமார் ட்வீட்!
Published on
Updated on
1 min read

நடிகர் சரத்குமார் சூர்யவம்சம் 2 பாகம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் கலக்கிய படம் சூர்ய வம்சம். கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியான இந்தப் படம் நேற்றுடன்   26வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிபெற்றது. நகைச்சுவை, குடும்ப உறவுகள் என இந்தப்  படம் 90களின் குழந்தைகளுக்கு விருப்பமான படமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சூர்யவம்சம் குறித்து நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய  சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்.

கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி! விரைவில் சூர்யவம்சம் - 2!” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் சூர்யவம்சம் 2 பாகம் குறித்து தகவல் கொடுத்துள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com