கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து

‘மார்க் ஆண்டனி’  படப்பிடிப்பில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2023, 6:21 am

‘மார்க் ஆண்டனி’  படப்பிடிப்பில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. 

அதனையடுத்து,  தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.

'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார்  இசையமைக்கிறார். 

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட லாரி நிற்காமல்  செட்டில் வேகமாக மோதும் விடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, விஷாலின் அருகிலேயே லாரி சென்றது. 

இதுகுறித்து நடிகர் விஷால் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ சில நொடிகளில் சில அங்குலங்களில் நான் உயிர் பிழைத்தேன்.  கடவுளுக்கு நன்றி. இந்தச் சம்பவத்தால் என் கால் மறத்துப்போனது.’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று படப்பிடிப்பின்போது கயிறு அறுந்து விழுந்ததில் லைட்மேன் ஒருவர் காயமடைந்துள்ளார். விஷால் படப்பிடிப்பில் தொடர்ந்து விபத்து நடப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.