நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவருடைய 170-வது படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: ’துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுத் தேதி இதுதானா?
இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவிதா டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1984-ல் வெளியான ‘உறவைக் காத்த கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, செல்வி, நானே ராஜா நானே மந்திரி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகை ஜீவிதா
பின், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவாரா?

மேக்கேதாட்டு -க்கு தீர்வு? ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்

போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!

சோனம் வாங்சுக்குடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு! உண்ணாவிரதம் வாபஸ்!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay


