கோலங்கள் 2 சீரியல் குறித்து இயக்குநர் அப்டேட்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

கோலங்கள் 2 சீரியல் குறித்து இயக்குநர் அப்டேட்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

கோலங்கள் 2 கண்டிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் என இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
Published on

கோலங்கள் 2 கண்டிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் என இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோலங்கல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல். இது 24 நவம்பர் 2003 முதல் 4 டிசம்பர் 2009 வரை 1,533 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்ட பிரைம் டைம் சீரியல் ஆகும். இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

இந்த தொடரில் தேவையானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடன் அபிஷேக் சங்கர், தீபா வெங்கட், மஞ்சரி,  ஸ்ரீ வித்யா, அஜய் கபூர், சத்யப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கோலங்கள் தொடரை தற்போது எதிர் நீச்சல் தொடரை இயக்கிவரும் திருச்செல்வம் இயக்கியிருந்தார்.

அன்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திருச்செல்வம் ஆங்கில ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், கோலங்கள் 2 கண்டிப்பாக வரும். இது அதிகம் நம்பிக்கை உள்ள சீரியல். தொடர்ச்சியான கதைக்கு அதிகம் வாய்ப்புள்ள சீரியல். காலம் கணிந்தால் கண்டிப்பாக கோலங்கள் 2 வரும். சன் டிவியில் மட்டும் வரும், வரனும் என்று தெரிவித்தார்.

கோலங்கள் 2 குறித்து இயக்குநர் திருச்செல்வம் கூறிய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com