
நடிகட் விஜய் சேதுபதி விடுதலை படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
'அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிக்க: ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த நக்மா!
இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‘விடுதலை படத்தில் 8 நாள் நடித்தால் போதும் என வெற்றிமாறன் என்னைக் கூப்பிட்டார். ஆனால், 8 நாளும் போட்டா எடுத்து என்னை ஏமாற்றிவிட்டார். ஆடுகளம் இசைவெளியீட்டு விழாவில் பார்வையாளராக அமர்ந்திருந்தேன். அதன்பின், அவர் இந்தப் படத்திற்குதான் இசைவெளியீட்டு விழா வைத்திருக்கிறார். விடுதலை மேடையில் நான் இருக்கிறேன் என நினைக்கும்போது அற்புதமாக உள்ளது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஒருவேளை வடசென்னை - 2 படத்தில் நான் இருக்கலாம்’ எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.