ராகவா லாரன்ஸ், நயன்தாரா உடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 வில் நடித்து வருகிறார். தொடர்ந்து அதிகாரம், ஜிகிர்தண்டா 2 படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானிசங்கர் உடன் நடித்திருக்கும் ருத்ரன் திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் ஆடை, மேயாத மான், குலு குலு போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கடனை அடைக்க அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகளை விற்கும் அதானி?
திகில்-நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.