தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட்! 

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடித்த புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :13 மார்ச் 2023, 12:28 pm

DIN

கைதி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ். பின்னர் மாஸ்டர், அந்தகாரம் படங்களில் நடித்தார். விக்ரம் படத்திலும் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஹிந்தி படமொன்றிலும் நடித்து வருகிறார். 

பாவக்கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். 

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. 

தற்போது  டேவிட், சோலோ படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பிஜோய் நம்பியார். இவரது இயக்கத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து ‘போர்’ எனும் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இது தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரேசமயத்தில் படமாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.