

'கயல்' தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கு மக்கள் கொடுத்த ஆரவாரத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மக்கள் அலைக்கு முன்பு என்று குறிப்பிட்டு அவர் பதிவேற்றியுள்ள விடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சின்னத் திரையில் ஒளிபரப்பாகி வரும் மற்ற தொடர்களை விட டிஆர்பி பட்டியலிலும் 'கயல்' தொடர் முதன்மை இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், சன் தொலைக்காட்சி சார்பில் மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சன் குடும்ப சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெறுவது வழக்கம்.
அந்தவகையில், திருப்பூரில் நடக்கும் சன் குடும்ப விழாவில் 'கயல்' தொடரின் நாயகி சைத்ரா ரெட்டி கலந்துகொண்டார். அவர் மேடையில் ஏறும்போது அங்கு சூழ்ந்திருந்த மக்களை நோக்கி கையசைத்தார். அவரை நோக்கி ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனை விடியோவாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.