மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பொன்னியின் செல்வன் - 2 மேக்கிங் விடியோ வெளியீடு

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய மேக்கிங் விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :11 மே 2023, 6:25 am

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய மேக்கிங் விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு,  இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’. 

முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது. 

ஏ.ஆா்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் பாகத்தை தொடா்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.  

வெளியான 10 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.