லால் சலாமில் நடிகர் ரஜினி மும்பை தாதாவாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்த நிலையில், தற்போது மும்பையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: வெளியான கங்குவா சூர்யா புகைப்படம்!
இந்நிலையில், மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் மும்பை தாதாவாக ரஜினி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.