கமல்ஹாசனின் 234வது படத்தில் பிரபல மலையாள நடிகர்!
கமல்ஹாசனின் 234வது படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார்.


கமல்ஹாசனின் 234வது படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில் ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் இப்படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோ கமலின் பிறந்த நாளான நவ.7-ல்(நாளை) வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து ராஜ் கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே கமல்ஹாசனின் 234வது படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் கமலுடன் முதல்முறையாக துல்கர் சல்மான இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...