அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.
இதையும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மேக்கிங் விடியோ!
மேலும், இப்படத்திற்கான தன் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இதன் புரோமோஷன் பணிகளை மேற்கொள்ள தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் பகுதியாக, கேப்டன் மில்லரின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2-வது அரையிறுதி: இந்தியா பேட்டிங்!

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர்!

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

