ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஷாருக்கான் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

பாலிவுட்டின் டங்கி படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :10 நவம்பர் 2023, 4:53 pm

DIN

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் டங்கி படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு இன்று (நவ. 10) வெளியிட்டுள்ளது.

ஐந்து நண்பர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க, ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது டங்கி படக்குழு.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்  கொண்டாடும் வகையில், இந்த தீபாவளிக்கு நம் அன்புக்குரியவர்களுடன் இருப்பதன் மகிழ்ச்சியையும் பண்டிகை உணர்வையும் குறிக்கும் வகையில்,  டங்கி திரைப்படத்திலிருந்து இரண்டு அட்டகாசமான புதிய  போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உருவாக்கத்தில்,  இதயத்தைத் கவரும் படைப்பான,  டங்கி படத்தின் உலகை அறிமுகப்படுத்தும்,  டன்கி டிராப் 1  பெரும் வரவேற்பை பெற்றாலும், இந்த புதிய  போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், வண்ணமயமான கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆழமான பிணைப்பையும் வெளிப்படுத்துகின்றன.

இத்திரைப்படத்தை ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, "டங்கி" திரைப்படம்,  இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.